மனிதர்களை பார்த்தால் பயம் : ஒரே அறையில் பல வருடங்களாக அடைந்திருக்கும் தாய், மகள்.. இப்படியும் நடக்குமா?!!
Author: Udayachandran RadhaKrishnan20 December 2022, 3:50 pm
நான்கு ஆண்டுகளாக ஒரே அறையில் அடைந்து கிடக்கும் தாய், மகளை மீட்டு மருத்துவமனையில் அனமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள கொய்யூரு கிராமத்தில் வசிக்கும் பவானி மற்றும் அவருடைய மகள் மணி ஆகியோருக்கு மனிதர்களை பார்த்தால் அச்சம் என்று கூறப்படுகிறது.
இதனால் இரண்டு பேரும் கடந்த நான்கு ஆண்டுகளாக வீட்டில் உள்ள ஒரே அறையில் அடைந்து கிடந்தனர். இரண்டு பேருக்கும் பவானியின் கணவன் ஹோட்டலில் இருந்து உணவு வாங்கி கொடுத்து பாதுகாத்து வந்திருக்கிறார்.
ஒரே அறையில் அடைந்து கிடந்த காரணத்தால் இரண்டு பேருக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது பற்றி தகவல் அறிந்த காக்கிநாடா சுகாதாரத்துறை அதிகாரிகள், போலீசாருடன் அங்கு சென்று இரண்டு பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர்.
ஆனால் போலீசாரை பவானி தாக்க முயன்றார். மேலும் போர்வைக்குள் மறைந்து கொண்டு முகத்தை காட்டாமல் பேசினார். நீங்கள் யாரும் இங்கு இருக்கக் கூடாது என்று பவானி கூறினார்.
அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் தாய், மகள் ஆகிய இரண்டு பேருக்கும் மனிதர்களை பார்த்தாலே அச்சம் ஏற்படும். எனவே அவர்கள் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை என்று கூறினார்.
இந்த நிலையில் நீண்ட போராட்டத்திற்கு பின் இரண்டு பேரையும் வீட்டில் இருந்து மீட்ட அதிகாரிகள் அவர்களை தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர்.
பவானிக்கு திருமணம் நடைபெற்ற பின் அவருடைய கணவர் மற்றும் உறவினர்கள் ஆகியோர் இந்த பகுதியில் மந்திரவாதிகள் அதிகம் உள்ளனர். எனவே யாருடனும் பேசக்கூடாது என்று கூறி இருக்கிறார்கள்.
தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் இதே போல் கூறியதால் அவருக்கு மனிதர்களைப் பார்த்தால் அச்சம் ஏற்பட துவங்கியுள்ளது. குழந்தை பிறந்து அந்த குழந்தை வளர்ந்த பின் மகளிடமும் அவர் அதேபோல் கூறி இருக்கிறார்.
எனவே அவருடைய மகள் மணிக்கும் மனிதர்களை பார்த்தால் அச்சம் ஏற்பட துவங்கி இரண்டு பேரும் வீட்டுக்குள் அடைபட்டு கிடந்துள்ளனர்.
இதன் காரணமாக இரண்டு பேருக்கும் மனநிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
0
0