மாநிலத்தை இரண்டாக பிரிக்க முதலமைச்சர் முயற்சி ; இனி பொறுத்துக் கொள்ள மாட்டோம்… பெண் அமைச்சர் ஆவேசப் பேச்சு!!

Author: Babu Lakshmanan
3 January 2023, 6:18 pm

திருப்பதி: எங்கள் மாநிலத்தில் அரசியல் ரீதியாக காலடி எடுத்து வைத்தால் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்று திருப்பதியில் ஆந்திர அமைச்சர் ரோஜா ஆவேசமாக தெரிவிததுள்ளார்.

ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா இன்று காலை திருப்பதி மலையில் ஏழுமலையானை வழிபட்டார். தொடர்ந்து கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களுடன் பேசிய அவர், ஐந்து நாள் இடைவெளியில் தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவில் நடத்திய இரண்டு நிகழ்ச்சிகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் மரணம் அடைந்தனர்.

30 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கு கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, அவருடைய மகன் லோகேஷ் ஆகியோர் முழு பொறுப்பு. அவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடர வேண்டும். ஆந்திராவை இரண்டாக உடைத்த சந்திரசேகர் ராவ் இப்போது தன்னுடைய கட்சியை தேசிய கட்சியாக அறிவித்து, ஆந்திராவில் அரசியல் நடத்த துடித்து கொண்டிருக்கிறார்.

அவர் ஆந்திராவில் அரசியல் ரீதியாக அடியெடுத்து வைத்தால் நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம், என்று அப்போது கூறினார்.

  • Virat Kohli fake video அனுஷ்கா சர்மா சொன்னதும் வீடீயோவை டெலீட் பண்ணிட்டேன்..அசிங்கப்பட்ட நடிகர் மாதவன்.!