அக்னிபத் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு… முப்படைகளில் இணைக்கும் முடிவுக்கு எதிராக மனு : நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!!!

Author: Udayachandran RadhaKrishnan
27 February 2023, 11:54 am

இந்தியா பாதுகாப்பு படையான முப்படைகளில் 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை தேர்வு செய்யும் திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டுவந்தது.

17½ வயது முதல் 23 வரையிலான இளைஞர்கள் இந்த திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். ராணுவம், விமானப்படை, கடற்படை என மும்படையில் ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை தேர்வு செய்ய எடுக்கப்பட்ட இந்த அக்னிபத் திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.

ஆனாலும், இந்த திட்டத்தை வாபஸ் பெற முடியாது என்று மத்திய அரசு மறுத்துவிட்டது. இதனை தொடர்ந்து அக்னிபத் திட்டத்தின் கீழ் ஆள் சேர்க்கும் வேலையில் விமானப்படை, ராணுவம், கடற்படை என மும்படைகளும் களமிறங்கின.

இதனிடையே, மத்திய அரசு கொண்டு வந்த அக்னிபத் திட்டத்தை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை இன்று விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், அக்னிபத் திட்டத்தை எதிர்த்து தொடர்ப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது.

தேச நலனுக்காகவும், பாதுகாப்பு படையை மேம்படுத்த இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்த டெல்லி கோர்ட்டு அக்னிபத் திட்டத்திற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ