உல்லாசமாக இருக்கலாம்… நிர்வாண வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய பிரபல சீரியல் நடிகை : ரூ.11 லட்சம் சுருட்டல்!!

முதியவரை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டல் : பிரபல சீரியல் நடிகையை தூக்கிய போலீஸ்!!

மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் நித்யா சசி. 32 வயதாகும் இவர், திருவனந்தபுரத்தில் வசித்து வரும் 75 வயது முதியவரிடம் வாடகைக்கு வீடு கேட்டு போனில் தொடர்பு கொண்டிருக்கிறார்.

பின்னர் அடிக்கடி இதுதொடர்பாக முதியவரின் வீட்டுக்கும் சென்றுள்ள நித்யா சசி, அவருடன் நெருங்கி பழகி வந்திருக்கிறார். பின்னர் ஒரு நாள் தனது நண்பர் பினு என்பவரையும் முதியவரின் வீட்டுக்கு அழைத்து சென்ற நித்யா, முதியவரை நிர்வாணமாக்கி அவரை தனது செல்போனில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்துள்ளார்.

பின்னர் அந்த வீடியோவை காட்டி மிரட்டி, பணம் கேட்டுள்ளார். பணம் தராவிட்டால் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என நித்யா சசி மிரட்டியதால் பயந்துபோன அந்த முதியவர் முதலில் ரூ.11 லட்சம் பணத்தை கொடுத்திருக்கிறார்.

அதன்பின்னரும் விடாமல் பின் தொடர்ந்து அடிக்கடி பணம் கேட்டு மிரட்டி இருக்கிறார் நித்யா சசி. அவரின் டார்ச்சர் தாங்க முடியாமல் வேறுவழியின்றி காவல்துறையின் உதவியை நாடி இருக்கிறார் முதியவர்.

போலீஸிடம் நடந்ததை கூறி அவர்கள் மீது ஆக்‌ஷன் எடுக்குமாறு அந்த முதியவர் கேட்டிருக்கிறார். இதையடுத்து களத்தில் இறங்கிய போலீஸ், அந்த நடிகையை சினிமா பாணியில் ஸ்கெட்ச் போட்டு தூக்கி இருக்கிறார்கள்.


நடிகைக்கு பணம் தருவதாக வரவைக்குமாறு போலீசார் முதியவரிடம் கூறி இருக்கின்றனர். இதையடுத்து முதியவரும் அதேபோல் சொல்ல பணம் பறிக்கும் ஆசையுடன் வந்த நித்யா சசியை, முதியவரின் வீட்டில் மறைந்திருந்த போலீசார் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

இதையடுத்து நித்யா சசி மற்றும் அவரது நண்பர் பினு இருவரையும் கைது செய்த போலீசார், அவர்கள் இதற்கு முன் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார்களா என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதியவரை ஏமாற்றி பணம் பறித்த வழக்கில் சீரியல் நடிகை கைது செய்யப்பட்டு உள்ளது, மலையாள சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கைதான நடிகை நித்யா சசி, ஒரு வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…

13 hours ago

பயங்கரவாதிகளை தேடி தேடி ஒழிக்க வேண்டும் : துணை முதலமைச்சர் பரபரப்பு பேச்சு..!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…

14 hours ago

கமல்ஹாசன் செய்த திடீர் புரட்சி! ஓடிடி விநியோகத்தையே தலைகீழாக புரட்டிப்போட்ட சம்பவம்?

புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…

14 hours ago

கட்டுனா மாமனை மட்டும் தான் கட்டுவேன் : ஒரே மேடையில் இரு பெண்களுடன் இளைஞர் திருமணம்..(வீடியோ)!

தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…

15 hours ago

அய்யோ; இது சுத்த பொய்- பதறிப்போய் ஓடி வந்த அஜித்தின் மேனேஜர்? அப்படி என்ன நடந்திருக்கும்?

அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…

15 hours ago

திருமாவுடன் கைக்கோர்க்கும் ராமதாஸ்.. 14 ஆண்டுகளுக்கு பின் மனமாற்றம் : ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்!

தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…

15 hours ago

This website uses cookies.