மின்வெட்டை கண்டித்து போராடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு… 3 பேர் பலி : வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!
Author: Udayachandran RadhaKrishnan27 July 2023, 9:37 am
பீகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மின்வெட்டு நிலவி வருகிறது. இதைக் கண்டித்து அம்மாவட்ட மக்கள் ஒன்று திரண்டு நேற்று போராட்டம் நடத்தினர்.
கூட்டத்தை கட்டுப்படுத்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீது சிலர் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து தடியடி நடத்திய போலீசார், மக்கள் கூட்டம் கலைந்து செல்லாததால் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் குர்ஷித் ஆலம் என்பவர் உயிரிழந்தார், அதே போல பலர் காயமடைந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் படுகாயமடைந்தவர்கள் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 3ஆக அதிகரிததுள்ளது. மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.
பீகார் : மின்வெட்டை கண்டித்து நடந்த போராட்டத்தில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்ததில் 3 பேர் பலி 10 பேர் காயம்
— Tamil Diary (@TamildiaryIn) July 27, 2023
#Bihar | #Barsoi pic.twitter.com/WJEfK6jvfl
மின்வெட்டு காரணமாக போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அம்மாநில மக்களிடையே கடும் அதிருப்தியையும், எதிர்ப்பும் எழுந்துள்ளது.