பயணிகளை விட்டுவிட்டு லக்கேஜ்களுடன் புறப்பட்ட விமானம் : பிரதமர் மோடிக்கு சென்ற புகாரால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
10 January 2023, 2:17 pm

இன்று காலை 6:30 மணி அளவில் பெங்களூரு கெம்பே கவுடா விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு கோ பர்ஸ்ட் என்ற விமானம் புறப்பட்டது.

இந்த விமானம் பாஸ்களுடன் காத்திருந்த 54 பயணிகளை விட்டுவிட்டு அவர்களுடைய லக்கேஜ்களுடன் மட்டும் ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சென்றது.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகள் விமானம் இல்லாததை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகள் தங்களது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் அலுவலகம், மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஆகியோரை டாக் செய்து புகார் தெரிவித்தனர்.

மேலும் பெங்களூரு விமான நிலையத்தில் குழப்பம் நிலவுவதாக கூறி வீடியோ ஒன்றையும் வெளியிட்டனர். விமானம் பயணிகளை விட்டு சென்றதால், சற்று நேரம் விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?