கெஜ்ரிவாலை தொடர்ந்து சிபிஐ ரெய்டில் சிக்கிய திரிணாமுல் காங்., முன்னாள் எம்பி… கைதாக வாய்ப்பு?!

Author: Udayachandran RadhaKrishnan
23 March 2024, 2:26 pm

கெஜ்ரிவாலை தொடர்ந்து சிபிஐ ரெய்டில் சிக்கிய திரிணாமுல் காங்., முன்னாள் எம்பி… கைதாக வாய்ப்பு?!

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் பெற்ற வழக்கில் திரிணமுல் காங்., முன்னாள் எம்.பி., மஹூவா மொய்த்ரா வீட்டில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பார்லிமென்டில் கேள்வி கேட்க லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் விசாரணை நடத்திய குழு அறிக்கையின்படி திரிணமுல் காங்கிரஸ் லோக்சபா எம்.பி. மஹூவா மொய்த்ரா கடந்தாண்டு டிசம்பரில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

அவரது எம்.பி., பதவியும் பறிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி ஆறு மாதங்களுக்குள் அறிக்கை அளிக்கும்படி சி.பி.ஐ.,க்கு லோக்பால் அமைப்பு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், மஹூவா மொய்த்ரா மீது சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது.

இந்நிலையில், கோல்கட்டாவில் உள்ள மஹூவா மொய்த்ரா வீட்டில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். சமீபத்தில் கெஜ்ரிவால் வீட்டில் சோதனை நடைபெற்ற பின் கைது செய்யப்பட்டார். தற்போது திரிணாமுல் காங்., எம்பி வீட்டில் சோதனை நடத்தப்படுவது பரபரப்பாக காணப்படுகிறது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?