என்னடா இது மிக்சருக்கு வந்த சோதனை.. கேரளாவில் தடை!

Author: Hariharasudhan
10 October 2024, 6:19 pm

டாட்ராசின் எனப்படும் வேதிப்பொருள் அதிகம் கலந்திருப்பது கண்டறியப்பட்டதால், கோழிக்கோடு மாவட்டத்தில் மிக்சர் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோழிக்கோடு: சில மாதங்களுக்கு முன்பு, ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாய் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து, ரசாயனம் கலந்து தயாரிக்கப்படும் பஞ்சு மிட்டாய், சிக்கன் வகைகளுக்கும் தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. அது மட்டுமல்லாமல், இவ்வாறான அறிவிப்புக்குப் பிறகு உணவு பாதுகாப்புத் துறையினர் அதிரடி சோதனைகளையும் மேற்கொண்டனர். இதில் டன் கணக்கிலான கெட்டுப்போன இறைச்சியும் சிக்கி, அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தான் பலராலும் விரும்பி உண்ணப்படும் மிக்சர் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு உணவு பாதுகாப்புத் துறை தடை விதித்துள்ளது. கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தின் வடகரா, பெரம்ப்ரா, கொடுவல்லி மற்றும் திருவம்பாடி வட்டாரங்களில் மிக்சர் மாதிரிகளை உணவு பாதுகாப்புத் துறையினர் சேகரித்துள்ளனர். பின்னர், இதனை சோதனைக்கு உட்படுத்தியதில் அதில் டார்ட்ராசின் (tartrazine) எனப்படும் வேதிப்பொருள் கலந்திருப்பதாக கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, மாதிரிகள் சேகரிக்கப்பட்ட நான்கு இடங்களில் உள்ள ஸ்வீட் மற்றும் பேக்கரி கடைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை உணவு பாதுகாப்புத் துறை எடுத்துள்ளது. மேலும், கோழிக்கோடு மாவட்டத்தில் மிக்சர் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு உணவு பாதுகாப்புத் துறை தடை விதித்துள்ளது.

இதையும் படிங்க: நீங்க தினமும் சாப்பிடுற உணவு இப்படித்தான் இருக்கணும்… அறிவுரை கூறும் உலக சுகாதார மையம்!!!

டார்ட்ராசின் என்பது உணவுப் பொருட்கள் மட்டுமின்றி நூல் மற்றும் பட்டுகளிலும் நிறமூட்டிகளாக சேர்க்கப்படுகிறது. பெரும்பாலும், மஞ்சள் நிறத்தை உருவாக்குவதற்கு இந்த டாட்ராசின் வேதிப்பொருள் பயன்படுகிறது. எனவே தான், தேர்ந்தெடுக்கப்பட்ட மிக்சர் மாதிரிகள் அடர் மஞ்சள் நிறத்தில் பார்ப்பதற்கு பளீர் நிறத்தில் காணப்படுகிறது என உணவு பாதுகாப்புத் துறை துணை ஆணையர் ஏ.ஜாகீர் உசேன் குறிப்பிட்டுள்ளார்.

  • Thala ajith kumar Movie updates GOOD bad ugly pongal 2025குட் பேட் அக்லி படத்திற்கு பின் அஜித்தின் அடுத்த திட்டம்?
  • Views: - 137

    0

    0