சபரிமலையில் முதன்முறை..ஒரே நாளில் 1,00,969 பக்தர்கள் தரிசனம்…கட்டுக்கடங்காத கூட்டத்தால் கடும் நெரிசல்!
Author: Udayachandran RadhaKrishnan25 December 2023, 1:07 pm
ஒரே நாளில் 1,00,969 பக்தர்கள் தரிசனம்… சபரிமலையில் முதன்முறைய… கட்டுக்கடங்காத கூட்டத்தால் கடும் நெரிசல்!
சபரிமலை மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் தேதி கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை தந்தனர்
ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு ஐயப்பனை தரிசிக்க சபரிமலைக்கு பக்தர்கள் தொடர்ந்து வருகை தந்து வருகின்றனர்
சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்ய ஆன்லைன் மூலமுன் ஸ்பாட் புக்கிங் முறையிலும் ஐயப்ப பக்தர்கள் பதிவு செய்து தரிசினம் மேற்கொண்டு வருகின்றனர்
நேற்று ஒரே நாளில் 97287 பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க சபரிமலைக்கு வருகை தந்தனர் இதனால் பம்பையில் கடும் போக்குவரத்து ஏற்பட்டுள்ளதால் விதிக்கப்பட்டுள்ளதால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் மண்டல பூஜை அன்று ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வர வாய்ப்புள்ளதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் கோயில் நிர்வாகம் திணறி வருகின்றனர்