முதன்முறையாக ஒடிசாவில் ஆட்சியமைதத பாஜக.. பிரதமர் முன்னிலையில் முதலமைச்சராக பதவியேற்ற மோகன் மாஜி!

Author: Udayachandran RadhaKrishnan
12 June 2024, 6:28 pm

ஒடிசா மாநிலத்தில், மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. இந்த தேர்தலில் மாநிலப்பேரவையின் 147 இடங்களிலும் தேர்தலானது நடைபெற்றது.

இதில் 78 இடங்களை கைப்பற்றி பாஜக தனி பெருபான்மையுடன் முதல் முறையாக ஒடிசாவில் ஆட்சி அமைத்துள்ளது. அதனை தொடர்ந்து மத்திய அமைச்சர்களின் கூட்டமானது புவனேசுவரத்தில் நேற்றைய நாள் (ஜூன்-11) நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஒரு மனதாகவே முதல்வராக மோகன் சரண் மாஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், கியோஞ்சர் தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு தேர்வான சரண் மாஜீ பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர் ஆவார்.

தற்போது இவர் இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஒடிசாவில் 15-வது முதல்வராக தேர்வாகி இருக்கிறார். இவரை தொடர்ந்து கே.வி.சிங் தேவ், பிரவதி பரிதா ஆகிய இருவர் துணை முதல்வர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.

மேலும், சட்டப்பேரவை பாஜக குழு தலைவராகத் தேர்வு செய்யப்பட்டதையடுத்து, ஒடிசா ஆளுநரான ரகுபர் தாஸை சந்தித்து மோகன் சரண் மாஜீ ஆட்சியமைக்க உரிமை கோரினார், அதன் பின் ஆளுநரும் அவருக்கு ஆட்சியமைக்க முறைப்படி அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில், ஒடிசாவின் முதல்-மந்திரியாக மோகன் சரண் மாஜி பதவியேற்றார். புவனேஸ்வரத்தின் ஜனதா மைதானத்தில் நடைபெற்ற விழாவில் கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். துணை முதல் மந்திரிகளும் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதல் மந்திரிகள், மத்திய மந்திரிகள் மற்றும் மூத்த பா.ஜ.க. தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 300

    0

    0