ஒற்றை ஆளாக காட்டு யானையை எதிர்த்து நின்று மக்களை காப்பாற்றிய வன அதிகாரி: வைரலாகும் வீடியோவால் குவியும் பாராட்டு…!!

Author: Rajesh
21 February 2022, 1:23 pm

ஒடிசா: கிராம மக்களை நோக்கி சீறிப்பாய்ந்து வந்த ஒற்றை காட்டு யானையை வனக்காவலர் ஒருவர் தீப்பந்தத்தை காட்டி விரட்டிய வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

ஒடிசா மாநிலத்தின் ரெதாகோல் வனப்பிரிவுக்குட்பட்ட சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள சட்சாடி மற்றும் அங்கபிரா கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் கடந்த வாரம் ஒற்றை காட்டு யானை ஒன்று புகுந்தது.

இதையடுத்து, அந்த யானை அப்பகுதியில் உள்ள பயிர்களை நாசம் செய்யத் தொடங்கியது. அப்போது வனக்காவலர் சித்த ரஞ்சன் மிரி அந்த இடத்தை அடைந்து யானையை காட்டுக்குள் விரட்ட முயற்சி செய்தார். அவருடன் கிராம மக்கள் சிலரும் யானை விரட்ட முயற்சி செய்தனர்.

ஒரு கட்டத்தில் யானை ஆக்ரோஷத்துடன் துரத்தவே அவருடன் இருந்த அனைவரும் ஓடிவிட்டனர். ஆனாலும், வனக்காவலர் ரஞ்சன் தனி ஒரு ஆளாக நின்று யானையை விரட்டுவதில் மட்டும் கவனம் செலுத்தினார். அதன் பின் தீ பந்தத்தை காட்டி யானையை காட்டுக்குள் விரட்டி மக்களுக்கு பாதுகாப்பு அளித்தார்.

இந்த வீடியோவை ஒரிசாவின் ஐஎப்எஸ் அதிகாரி சுஷாந்த் நந்தா பகிர்ந்துள்ளார். அதில், தீங்கு விளைவிக்கும் வன விலங்குகளிடம் இருந்து மக்களை காக்க, தங்கள் உயிரை பற்றி கவலைபடாமல் தைரியமாக எதிர்கொள்ளும் தனது பகுதி ஊழியர்களின் துணிச்சலை அவர் பாராட்டினார். மேலும் யானையை தடுத்து நிறுத்திய வனக்காவலர் சித்தரஞ்சனின் துணிச்சலுக்கு வணக்கம் தெரிவித்தார்.

  • monalisa viral girl soon get chance to act in serial பட வாய்ப்பு பறிபோனால் என்ன?… வைரல் பெண் மோனலிசாவுக்கு வந்த திடீர் வாய்ப்பு?