மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முன்னாள் முதலமைச்சர் கேசிஆர் மகள் கைது.. ரவுண்டு கட்டிய அமலாக்கத்துறை!

Author: Udayachandran RadhaKrishnan
15 March 2024, 7:33 pm

மதுபானக் கொள்ளை முறைகேடு வழக்கில் முன்னாள் முதலமைச்சர் கேசிஆர் மகள் கைது.. ரவுண்டு கட்டிய அமலாக்கத்துறை!

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. முன்னதாக, ஐதராபாத்தில் உள்ள கவிதாவின் வீட்டில் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் சேர்ந்து சோதனை நடத்தினர். அதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சோதனையின் முடிவில் மேலவை உறுப்பினரான கவிதா கைதாகியுள்ளார். இதையடுத்து அவர் விசாரணைக்காக டெல்லி அழைத்துச் செல்லப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது நடவடிக்கையை கண்டித்து தெலுங்கானாவில் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக பிஆர்எஸ் தலைவர் கவிதா கடைசியாக கடந்த மார்ச் 2023ல் ED ஆல் விசாரிக்கப்பட்டார். ஆம் ஆத்மியின் தகவல் தொடர்புத் தலைவரான விஜய் நாயருடன் கவிதா தொடர்பில் இருந்ததாகவும், அவர் மதுபானத் தொழிலைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகளுடன் கொள்கைகளை உருவாக்கி செயல்படுத்தும் போது தொடர்பு கொண்டிருந்ததாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!