மராட்டிய முன்னாள் முதலமைச்சர் திடீர் மரணம்.. மருத்துவமனையில் அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது!!

Author: Udayachandran RadhaKrishnan
23 February 2024, 10:28 am

மராட்டிய முன்னாள் முதலமைச்சர் திடீர் மரணம்.. மருத்துவமனையில் அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது!!

மனோகர் ஜோஷியின் உடல் இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாட்டுங்கா மேற்கு ரூபரேல் கல்லூரிக்கு அருகிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்படுகிறது. பின்னர் அவரது இறுதி ஊர்வலம் பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. இறுதியாக, தாதர் மயானத்தில் அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்படும் என அவரது மகன் உன்மேஷ் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் இந்திய தேசிய காங்கிரஸின் சரத் பவாருக்குப் பிறகு, மாநிலத்தில் முதல் முறையாக சிவசேனா ஆட்சியை கடந்த 1995 -ம் கொண்டு வந்தவர். 2006 முதல் 2012 வரை நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், வாஜ்பாய் அரசு இருந்தபோது 2002 முதல் 2004 வரை மக்களவை சபாநாயகராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மனோகர் ஜோஷிக்கு நீண்ட காலமாக வயது தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள் இருந்தன. அவருக்கு புதன்கிழமை இருதய கோளாறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் மருத்துவனையில் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் மனோகர் ஜோஷி காலமானார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி