காதலர்களே ஜாக்கிரதை… DAIRY MILK சாக்லேட்டில் நெளிந்த புழு… வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

Author: Babu Lakshmanan
13 February 2024, 1:03 pm

நாளை காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், டெய்ரி மில்க் சாக்லேட்டில் உயிருடன் புழு இருந்தது வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

உலகம் முழுவதும் நாளை காதலர் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த தினத்தில் ரோஜா பூ எவ்வளவு முக்கிய பங்கு வகிக்கிறோ, அதைப் போல டெய்ரி மில்க் சாக்லேட்டும் தவிர்க்க முடியாத ஒன்றாகும். தங்களின் காதலன் அல்லது காதலிக்கு டெய்ரி மில்க் சாக்லேட் வாங்கி கொடுத்து தங்களின் அன்பை வெளிப்படுத்துவார்கள்.

எனவே, காதலர் தினத்தை முன்னிட்டு பூக்கள், சாக்லேட் விற்பனை களைக்கட்டி வருகிறது. இப்படியிருக்கையில், டெய்ரி மில்க் சாக்லேட்டில் உயிருடன் புழு ஒன்று ஊர்ந்து கொண்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்தைச் சேர்ந்த ராபின் சாக்கியஸ் என்பவர் ஆசை ஆசையாக சாப்பிட, ரூ.45 மதிப்பிலான டெய்ரி மில்க் சாக்லேட்டை வாங்கியுள்ளார். அதனை பிரித்து சாப்பிட முயன்ற போது, சாக்லேட்டில் உயிருடன் புழு ஒன்று ஊர்ந்து கொண்டிருந்தது.

இதைப் பார்த்து அதிர்ந்து போன அவர், புழு ஊர்ந்து செல்லும் வீடியோவையும், அமீர்பேட்டை மெட்ரோ நிலையத்தில் உள்ள ரத்னதீப் ரீடெய்ல் ஸ்டோரில் இருந்து ரூ.45 செலுத்தி டெய்ரி மில்க் சாக்லேட் வாங்கியதாக அதன் பில்லையும் இணைத்து X தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இது வைரலாகி வருகிறது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி