NewsClick இணையதளத்தின் நிறுவனர் ஊபா சட்டத்தில் அதிரடி கைது.. அலுவலகத்திற்கு சீல்.. கொந்தளிக்கும் INDIA கூட்டணி!!

Author: Udayachandran RadhaKrishnan
3 October 2023, 10:00 pm

NewsClick இணையதளத்தின் நிறுவனர் அதிரடி கைது.. அலுவலகத்திற்கு சீல்.. கொந்தளிக்கும் INDIA கூட்டணி!!

வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக 3 ஆண்டுகளில் ரூ38.05 கோடி பணத்தை நியூஸ் கிளிக் செய்தி இணையதளம் நிறுவனம் பெற்றதாக வழக்கு தொடரப்பட்டது.

சீனாவுக்கு ஆதரவாக செய்தி வெளியிடவே வெளிநாடுகளில் இருந்து இந்நிறுவனம் பணம் பெற்றது என்பதும் புகார். அமலாக்கத்துறை தொடர்ந்த இந்த வழக்கின் அடிப்படையில் டெல்லியில் இன்று போலீசார் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

நியூஸ் கிளிக் இணையதளத்தின் செய்தியாளர்கள் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி வீட்டில் தங்கி இருந்த செய்தியாளர் ஒருவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அவரிடம் இருந்த செல்போன், லேப்டாப் ஆகியவையும் பறிமுதல் செய்யபட்டன.

இதனையடுத்து டெல்லியில் உள்ள நியூஸ் கிளிக் செய்தி இணையதள அலுவலகத்துக்கு டெல்லி போலீசார் சீல் வைத்தனர். பின்னர் நியூஸ் கிளிக் செய்தி இணையதளத்தின் நிறுவனர் பிர்புர் புர்க்யஸ்தா மற்றும் அந்நிறுவனத்தின் அமித் சக்கரவர்த்தி ஆகியோர் ஊபா சட்டத்தின் கீழ் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

அண்மையில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், 2 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தை தொடங்கியது. வெளிநாட்டில் இருந்து ஆதரவைப் பெற்று இந்த பிரசாரத்தை தொடங்கி இருக்கிறது என குற்றம்சாட்டி இருந்தார். அத்துடன் அமெரிக்காவை சேர்ந்த நெவில்ராய் சிங்காம், நியூஸ் க்ளிக் இணையதளத்துக்கு நிதி உதவி செய்வதாகவும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பகிரங்கமாக கூறியிருந்தார்.

நியூஸ் கிளிக் செய்தி இணையதள நிறுவனத்துக்கு எதிரான இந்த நடவடிக்கைக்கு “இந்தியா” கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்திய பத்திரிகையாளர் சங்கமும் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 494

    0

    0