திருப்பதி லட்டு தயாரிப்பில் மோசடி? எடை குறைத்து விற்பனை.. பகல் கொள்ளை என குமுறும் பக்தர்கள் : சமாளிக்கும் தேவஸ்தானம்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 November 2022, 6:48 pm

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரசாத தயாரிப்பில் எடை மோசடி நடப்பதாக பக்தர்கள் ஆதாரத்துடன் புகார் தெரிவித்துள்ளனர்.

திருப்பதி மலையில் ஒரு லட்டு தலா 50 ரூபாய் விலையில் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக தினமும் மூன்று லட்சத்திற்கும் அதிகமான லட்டுக்களை தேவஸ்தான நிர்வாகம் தயார் செய்து வருகிறது.

தேவஸ்தானம் தயார் செய்து விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு லட்டு எடையும் 160 கிராமிலிருந்து 180 கிராம் வரை இருக்க வேண்டும்.

இந்நிலையில் பக்தர் ஒருவர் திருப்பதி மலையில் லட்டு வாங்கும் போது லட்டு விநியோக கவுண்டரில் வைக்கப்பட்டிருக்கும் தராசில் லட்டை எடை போட்டு பார்த்துள்ளார்.

அப்போது லட்டு எடை 97 கிராமில் இருந்து 110 கிராம் வரை மட்டுமே இருந்துள்ளது. இது பற்றி அந்த பக்தர் லட்டு விற்பனை கவுண்டரில் பணியில் இருக்கும் ஊழியரிடம் கேட்டபோது, உங்களுக்கு வேண்டுமென்றால் வேறு லட்டு தருகிறேன் என்று சமாளித்தார்.

இந்த காட்சிகளை தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்த அந்த பக்தர் அதனை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். மேலும் இது பெரும் மோசடி என்றும் அந்த பக்தர் குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்த நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தொழில் நுட்ப கோளாறு மற்றும் ஒப்பந்த ஊழியர்களின் அறியாமை ஆகியவற்றின் காரணமாக இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

தேவஸ்தானம் தயார் செய்து பக்தர்களுக்கு வழங்கும் லட்டு எடை தலா 160 கிராமிலிருந்து 180 கிராம் வரை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 565

    0

    0