பிரதமர் மோடி முதல் அண்ணாமலை வரை… DPஐ மாற்றிய பாஜகவினர் : 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ட்ரெண்டாகும் புகைப்படம்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 August 2022, 10:24 am

நாட்டின் 75வது ஆண்டு விடுதலை கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரி அமித்ஷா தங்களது டுவிட்டரின் முகப்பு புகைப்படங்களை மாற்றியுள்ளனர்.

இந்தியா விடுதலை அடைந்து 75 வருடங்கள் ஆகியுள்ளன. இதனை தொடர்ந்து, நாடு முழுவதும் ஓராண்டுக்கு விடுதலை பெருவிழாவாக இதனை கொண்டாட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக, தேசிய அளவில் ஹர் கர் திரங்கா பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன்படி, ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடியை ஏற்றும்படி அரசு சார்பில் வேண்டுகோள் விடப்பட்டு உள்ளது. இதனை முன்னிட்டு, நாட்டின் 75வது ஆண்டு விடுதலை கொண்டாட்டங்களை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தங்களது டுவிட்டரின் முகப்பு புகைப்படங்களை மாற்றியுள்ளனர்.

அதில், இருந்த பழைய படத்திற்கு பதிலாக நாட்டின் மூவர்ண கொடியை இடம் பெற செய்துள்ளனர். இதனை தொடர்ந்து பிரதமர் மோடி, நாட்டிலுள்ள மக்களும் தங்களது சமூக ஊடகத்தின் முகப்பு பக்கத்தில் தேசிய கொடியை வைக்கும்படி கேட்டு கொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஹெச் ராஜா உள்ளிட்ட பாஜக முக்கிய நிர்வாகிகளும் தங்களது DPஐ மாற்றியுள்ளனர். நாட்டின் தேசிய கொடி எனப்படும் மூவர்ண கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கையாவின் பிறந்த நாளும் இன்று கொண்டாடப்படுகிறது.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!