ஆசன வாயில் காற்றுபிடித்து விபரீத விளையாட்டு.. குடல் வெடித்து இளைஞர் சுருண்டு விழுந்து பலி ; நண்பன் கைது..!!

Author: Babu Lakshmanan
29 March 2024, 5:02 pm

கர்நாடகா அருகே ஆசனவாயில் ஏர் பிரஷர் பைப் மூலம் காற்று பிடித்து விளையாடிய போது, இளைஞர் ஒருவர் குடல் வெடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜயபுரா மாவட்டத்தைச் சேர்ந்த யோகேஷ் (28) என்பவர் பெங்களூரூவில் தங்கி டெலிவரி ஏஜென்ட்டாக பணிபுரிந்து வருகிறார். அவரது பைக்கை சம்பிகேஹள்ளி பகுதியில் நண்பன் முரளி வேலை செய்யும் சர்வீஸ் சென்டரில் பழுது பார்ப்பதற்காக விட்டுள்ளார்.

அப்போது, நண்பர்கள் இருவரும் ஏ பிரஷர் பைப் மூலம் காற்று அடித்து விளையாடியுள்ளனர். ஒரு கட்டத்தில், முரளி, அந்த பைப்பை எடுத்து யோகேஷின் ஆசன வாயில் வைத்து காற்று பிடித்துள்ளார். இதனால், யோகேஷின் வயிறு பெரிதாகி, குடல் வெடித்து நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

இதையடுத்து, அவரை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் போது, அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, முரளி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…