ஜி20 மாநாட்டில் கெத்து காட்டிய இந்தியா… தலைமை பொறுப்பேற்று அசத்தல் ; உலக தலைவர்களின் தலைவரானார் பிரதமர் மோடி..!!

Author: Babu Lakshmanan
16 November 2022, 5:00 pm

இந்தோனேசியாவில் நடந்த மாநாட்டின் நிறைவில் ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டது

இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 19 நாடுகளுடன், ஐரோப்பிய கூட்டமைப்பும் ஒன்றிணைந்தது ஜி20 அமைப்பு ஆகும். இந்த அமைப்பின் 2 நாள் உச்சி மாநாடு இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில், இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோபைடன், சீன அதிபர் ஜின்பிங், இங்கிலாந்து அதிபர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் மெக்ரான் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் பங்கேற்றனர்.

g20 summit - updatenews360

இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, உக்ரைன்- ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தினார். பின்னர் அமெரிக்கா அதிபர் ஜோபைடன், செனகல் அதிபர் மேக்சி சால், நெதர்லாந்து அதிபர் மார்க்ரூட் ஆகியோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து, சீன அதிபர் ஜின்பிங், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் மெக்ரான் ஆகியோரை சந்துத்து நலம் விசாரித்தார்.

கடல் அரிப்பை தடுப்பது, கரியமில வாயுக்களை கட்டுப்படுத்துவது ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கும் அலையாத்தி காடுகளை பிரதமர் மோடி பார்வையிட்டார். மாநாட்டின் 2வது மற்றும் கடைசி நாளான இன்றும் பிரதமர் மோடி பல்வேறு நாட்டு தலைவர்களுடன் சந்தித்து பேசினார்.

g20 summit - updatenews360

இந்த நிலையில், அடுத்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி ஜி-20 மாநாட்டை இந்தியா நடத்த இருப்பதால், ஜி-20க்கு இந்தியா தலைமை தாங்குவதற்கான செயல்முறைகளை பிரதமர் மோடியிடம் இந்தோனேசியா அதிபர் விடோடோ முறைப்படி வழங்கினார்.

உச்சிமாநாட்டின் நிறைவு விழாவில் இந்தோனேசியா ஜனாதிபதி விடோடோ ஜி20 தலைவர் பதவியை இந்தியாவிடம் ஒப்படைத்தார். இதன்மூலம், பிரதமர் மோடி உலக தலைவர்களின் தலைவரானார்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 410

    0

    0