காரில் ரகசிய அறை அமைத்து கஞ்சா கடத்தல்.. புஷ்பா பட பாணியில் துணிகரம்..!!!

Author: Udayachandran RadhaKrishnan
28 August 2024, 9:42 am

தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் கன்கோல் சோதனைச் சாவடியில் கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது அவ்வழியாக சென்று கொண்டிருந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில் காரில் எதுவும் கிடைக்கவில்லை.

இருப்பினும் போலீசாருக்கு அந்த காரில் சந்தேகம் ஏற்பட்டு டிரைவரிடம் விசாரித்ததில் முன்னுக்கு பின் முரண்பாடான பதில் கூறியதில் சந்தேகம் வலுத்தது.

எனவே காரில் ஏதோ இருக்குமோ என்று சந்தேகத்துடன் காரில் இருந்த இருக்கைகளை எடுத்து பார்த்த போலீசாரே அதிர்ச்சி அடைந்தனர். ஒவ்வொரு இருக்கையின் கீழும் ஒரு ரகசிய பெட்டி ஏற்பாடு செய்யப்பட்டுருந்தது.

அதை திறந்து பார்த்தபோது அதில் 83.4 கிலோ கஞ்சா இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இவற்தை ஆந்திரா – ஒடிசா எல்லை மலைகிராமத்தில் இருந்து பெற்து மகாராஷ்டிராவுக்குச் கடத்தி செல்வது தெரிய வந்தது. இதனையடுத்து காருடன் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹபீஸ் என்பவரை கைது செய்து ₹ 33.50 லட்சம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கஞ்ச கடத்துவதற்காக புஷ்பா பட பாணியில் காரின் இருக்கைக்கு அடியில் ரகசிய அறையை ஏற்படுத்தி கஞ்சா கடத்தினால் யாருக்கும் சந்தேகம் வராத வகையில் மேலே இருக்கைகள் போடப்பட்டு கஞ்சா கடத்தியது போலீசாரை அதிர்ச்சி அடைய செய்தது.

  • Mysskin controversial speech வாய திறந்தால் கெட்ட வார்த்தை…மேடை நாகரீகம் தெரியாதா…மிஷ்கினை வறுத்தெடுத்த பிரபல இயக்குனர்கள்..!