கேஸ் சிலிண்டர் வாகனத்தை பின் தொடர்ந்து சிலிண்டர் திருட்டு : சொகுசு காரில் வந்த டிப் டாப் திருடர்கள் கைவரிசை!
Author: Udayachandran RadhaKrishnan3 March 2024, 2:28 pm
கேஸ் சிலிண்டர் வாகனத்தை பின் தொடர்ந்து சிலிண்டர் திருட்டு : சொகுசு காரில் வந்த டிப் டாப் திருடர்கள் கைவரிசை!
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் மாதன்னப்பேட்டையில் உள்ள பார்கவி கேஸ் ஏஜென்சிக்கு சொந்தமான சரக்கு வேனில் காஸ் சிலிண்டர் விநியோகம் செய்ய வழக்கம்போல் ஊழியர்கள் சென்றனர்.
சைதாபாத் மெயின் சாலையோரம் நிறுத்தி கேச் சிலிண்டரை டேலிவரி செய்ய ஊழியர் உள்ளே சென்றார். சரியாக அதே நேரத்தில் காரில் வந்த இருவர் இதை கவனித்து காரை நிறுத்தி சிறிது நேரம் அங்கேயே காத்திருந்து கேஸ் வாகனத்தின் அருகே யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு சிலிண்டரை எடுத்துக்கொண்டு காரில் வைத்து கொண்டு சென்றனர்.
இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. கேஸ் ஏஜென்சி அளித்த புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் கேஸ் சிலிண்டரை திருடியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.