#Breaking தனியார் நிறுவனத்தில் வாயு கசிவு… பொட்டு பொட்டுனு மயங்கி விழுந்த ஊழியர்கள்.. பதறியோடிய அதிர்ச்சி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
3 June 2022, 4:40 pm

ஆந்திரா : பிரபல தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு அருகில் இருந்து ஆயத்த ஆடை நிறுவனத்திற்கு பரவியதால் பணிபுரிந்த பெண்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அனக்காப்பள்ளி அருகே உள்ளாட்சி அட்சிதாராபுரத்தில் செயல்படும் தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து அமோனியா வாயுசு கசிவு ஏற்பட்டது.

அந்த நிறுவனத்தில் பணியாற்றும் பெண்கள் மற்றும் அருகிலுள்ள தனியார் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றும் பெண்கள் ஆகியோர் 100 வாயு கசிவு காரணமாக பாதிக்கப்பட்டனர்.

அட்சிதாராபுரத்தில் செயல்படும் brandix sez மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து சற்றுமுன் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இந்த நிலையில் அங்கிருந்து கசிந்த அமோனியா வாயு அந்த நிறுவனத்தின் அருகில் செயல்பட்டு வரும் தனியார் ஆயத்த ஆடை நிறுவனத்திற்குள் புகுந்தது.

அந்த நிறுவனத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் வேலை செய்து வருகின்றனர். அவர்களில் பலர் அமோனியா வாயுவை சுவாசித்து மூர்ச்சை அடைந்தனர். என்னவோ நடக்கிறது என்பதை உணர்ந்த மற்றவர்கள் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு நிறுவனங்களில் இருந்து வெளியேறி சாலையில் ஓட்டம் பிடித்தனர்.

இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் மயங்கி விழுந்த சக ஊழியர்களை மற்றவர்கள் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் எச்சரிக்கை அடைந்த நிர்வாகங்கள் பாதிக்கப்பட்டவர்களை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தகவல் அறிந்த வருவாய் துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் ,போலீசார், தீயணைப்பு படையினர் ஆகியோர் அங்கு விரைந்து சென்று நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் அமோனியா வாயு கசிவு நிறுத்தப்பட்டு தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

  • Ajith viral interview இனியாவுது திருந்துங்க…ரசிகர்களை பார்த்து அஜித் கேட்ட நச் கேள்வி…வைரலாகும் வீடியோ..!