செய்தியாளர்களுக்கு அனுமதி கொடுங்க… உச்சி மாநாட்டில் ஒருசேர ஒலித்த குரல் : நிராகரித்த இந்தியா.. பரபர காரணம்!!
தலைநகர் டெல்லியில் இன்றும் நாளையும் ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. உலகின் பவுர்புல் நாடுகள் அனைத்தும் உறுப்பினராக இருக்கும் இந்த மாநாடு சர்வதேச அளவில் முக்கியமானது. இதில் பல முக்கிய விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
இதில் கலந்து கொள்ள அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா என உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் உலக தலைவர்கள் டெல்லிக்கு வந்தனர். இதன் காரணமாக டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதில் பாதுகாப்பு, அணுஆயுதம், வளரும் ஏஐ துறை எனப் பல விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதற்கிடையே இந்தக் கூட்டம் குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது பைடனுடன் வந்த செய்தியாளர்களுக்கு இந்த மீட்டிங்கில் கூடுதல் அணுகல் வழங்கப்பட வேண்டும் என்று அமெரிக்க அரசு பல முறை மோடி அரசுக்குக் கோரிக்கை விடுத்ததாகவும் இருப்பினும், இதற்கு இந்தியா மறுத்துவிட்டதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
டெல்லியில் நடக்கும் நிகழ்வுகளில் ஊடகங்கள் சிறந்த அணுகலைப் பெற வெள்ளை மாளிகை தன்னால் முடிந்ததைச் செய்து வருவதாகவும் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் தெரிவித்தார்.
நேற்றைய தினம் லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமரின் இல்லத்தில் மோடி- பைடன் இடையேயான சந்திப்பு நடைபெற்றது.
பொதுவாக இதுபோன்ற சந்திப்பிற்குப் பிறகு இரு நாட்டுத் தலைவர்களும் கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ செய்தியாளர்களைச் சந்திப்பார்கள். ஆனால், இந்த முறை அதுபோன்ற செய்தியாளர் சந்திப்பு எதுவும் இல்லை. மாறாக இரு நாடுகளும் இணைந்து கூட்டறிக்கை மட்டுமே வெளியிட்டன.
அதில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தரமாக உறுப்பினராக முயலும் நிலையில் அதற்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்று பைடன் மோடியிடம் உறுதியளித்தாக கூறப்பட்டிருந்தது.
இது குறித்து அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கூறுகையில், இது வழக்கமாக ஒரு நாட்டுத் தலைவர் மற்றொரு நாட்டிற்குச் செல்லும் போது நடக்கும் சந்திப்பு இல்லை.. ஜி20 உச்சி மாநாடு நடைபெறும் நிலையில், அதன் ஒரு பகுதியாகவே இந்தச் சந்திப்பு நடந்துள்ளது. பல தலைவர்கள் அங்கு இருந்ததால் சில பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டன.
அங்கே (இந்தியாவில்) அமெரிக்க ஊடகங்களுக்குச் சரியான பத்திரிகை அணுகலை உறுதி செய்ய வெள்ளை மாளிகை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது என்பதை நான் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்” என்றார்.
அமெரிக்காவின் டாப் அதிகாரிகள் பலரும் இந்தியா அதிகாரிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு அமெரிக்க ஊடகங்களுக்குக் கூடுதல் அணுகலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், அமெரிக்க ஊடகங்களுக்கு வெறும் கூட்டறிக்கை மட்டுமே தரப்பட்டது.
இதை இந்தியா நிராகரிக்க முக்கிய காரணமே, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடி அமெரிக்கா சென்று அதிபர் பைடனை சந்தித்த பின் இருநாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்திக்கவில்லை.
ஏனென்றால் செய்தியாளர் சந்திப்பிற்கு முதலில் இந்தியா தயக்கம் காட்டியதாகவும் பின்னர் அதற்கு பதிலாக கூட்டு அறிக்கை வெளியிடலாம் என யோசனையை முன்வைத்ததாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.