மோடியின் ஆட்சியில் உலக சக்தியாக உருவெடுத்துள்ள இந்தியா : சீன அரசின் அதிகாரப்பூர்வ நாளிதழிலில் புகழாரம்..!!

Author: Babu Lakshmanan
5 January 2024, 12:05 pm
pm-modi--updatenews360
Quick Share

பிரதமர் மோடியின் ஆட்சியில் உலக சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளதாக சீன அரசு அதிகாரப்பூர்வ நாளிதழான குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

சீன அரசின் நாளிதழான குளோபல் டைம்ஸில் அந்நாட்டின் பியூடான் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வு மைய இயக்குநர் சாங் ஜியோடாங் இந்தியா குறித்த கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். இந்தியாவின் அரசியல், பொருளாதார மாற்றம் உள்ளிட்டவை அதில் இடம்பெற்றுள்ளது.

அந்த கட்டுரையில், கடந்த 10 ஆண்டுகளில் உலக அரங்கில் இந்தியா அடைந்த முக்கியத்துவம் பற்றியும், அரசியல் மற்றும் கலாச்சார ரீதியாக தனக்கான சொந்த அடையாளத்தை இந்தியா உருவாக்கியுள்ளதாக கூறியுள்ளார். மேலும், பிரதமர் மோடியின் ஆட்சியில் பொருளாதாரம், சமூகம் மற்றும் வெளிநாட்டு கொள்கைகளில் இந்தியா குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும், மிகுந்த தன்னம்பிக்கையுடனும், திட்டமிடலுடனும் உலக அரங்கில் இந்தியா வலம் வந்து கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 4 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சி மற்றும் நகர்ப்புற கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், உலக நாடுகளுடனான உறவில் சரிசமமான இடத்தை இந்தியா அடைந்து வருவதாகவும் அந்தக் கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

சீனாவுடனான வர்த்தக உறவு அணுகுமுறையை மாற்றியுள்ள இந்தியா, முன்பு சீனாவின் இறக்குமதியை குறைப்பதில் கவனம் செலுத்திய இந்தியா, தற்போது ஏற்றுமதியை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவதாக கூறியுள்ளார். அதேபோல, காலனிய பாதிப்பிலிருந்து விடுபட்டு, சொந்த அடையாளத்தை இந்தியா வலுப்படுத்தி வருவதாகவும், சர்வதேச உறவுகளிலும் இந்தியா மிகுந்த திட்டமிடலுடன் செயல்படுவதாகவும் கூறியுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் உலக அரங்கில் முக்கிய சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளதாகவும், சர்வதேச உறவில் குறுகியகால கட்டத்தில் இத்தகைய மாற்றம் மிகவும் அரிதானது என தெரிவித்துள்ளார்.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 475

    0

    0