மகனை கொன்று உடலை சூட்கேஸில் வைத்தது ஏன்..? சிக்கியது பெண் தொழிலதிபர் எழுதிய கடிதம்… போலீசார் தீவிர விசாரணை..!!

Author: Babu Lakshmanan
13 January 2024, 9:24 am

கோவாவில் மகனை கொலை செய்த தனியார் நிறுவன பெண் தலைமை அதிகாரி எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கியது.

கர்நாடகா மாநிலம் தலைநகர் பெங்களூரூவில் Mindful AI LAB எனும் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுசனா சேத். அண்மையில் இவர் மகனுடன் கோவா சென்றிருந்த நிலையில், தங்கியிருந்த அறையில் மகனை கொலை செய்து சூட்கேஸில் உடலை எடுத்துச் செல்லும் போது கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து, சுசனா சேத்துக்கு மனநல பரிசோதனை நடத்திய போலீசார், நேற்று காலை வடக்கு கோவாவில் உள்ள கன்டோலிமில் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், மகனை கொலை செய்து விட்டு, கையை அறுத்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், அந்த காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், சுசனா சேத்தின் கைப்பையில் இருந்து கிழிந்த நிலையில் டிஸ்யூ துண்டை போலீசார் கைப்பற்றினர். துண்டு துண்டாக கிழிந்திருந்த அந்த டிஸ்யூவை ஒன்று சேர்த்து பார்த்த போது, அதில், தனது குழந்தையை கணவன் சந்திக்க அனுமதி கொடுத்தது தனக்கு பிடிக்கவில்லை என்று ஐ லைனர் மூலம் எழுதப்பட்டிருந்தது.

எனவே, இந்த காரணத்திற்காக அவர் கொலை செய்யப்பட்டாரா..? அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். அதோடு, அந்தக் கடிதத்தை சீல் வைத்து ஆய்வுக்காகவும் அனுப்பி வைத்தனர்.

  • Sex is for pleasure, not for having a baby: Famous actress's bold comment உடலுறவு என்பது மகிழ்ச்சிக்காக.. குழந்தை பெற்றுக்கொள்ள அல்ல : பிரபல நடிகை அதிரடி கருத்து!