கூண்டோடு பாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்எல்ஏக்கள்… கோவா அரசியலில் திடீர் திருப்பம்..!!

Author: Babu Lakshmanan
14 September 2022, 1:50 pm

கோவா ; கோவாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 8 பேர் பாஜகவில் இணைந்ததால் அம்மாநில அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கோவாவில் முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. எதிர்க்கட்சியாக இருந்து வரும் காங்கிரஸ் கட்சியில் மொத்தம் 11 எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்களில் முன்னாள் முதலமைச்சர் திகம்பர் காமத், எதிர்க்கட்சி தலைவர் மைக்கேல் லோபா, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான தெலிலா லோபோ, ராஜேஷ் பல்தேசாய், கேதர் நாயக், சங்கல்ப் அமோன்கர், அலெக்சோ செகீரா மற்றும் ருடால்ப் பெர்னாண்டஸ் ஆகிய 8 எம்எல்ஏக்கள்
கோவா முதலமைச்சரை நேரில் சென்று சந்தித்து பேசினர்.

இதன்பின்னர், காங்கிரஸ் சட்டசபை கூட்டம் நடத்தி ஆலோசனை செய்து விட்டு செய்தியாளர்களிடம் பேசிய மைக்கேல் லோபோ, “நாங்கள் பா.ஜ.க.வில் இணைந்து விட்டோம் என்றும், பிரதமர் மோடி மற்றும் கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் கரங்களை வலுப்படுத்த போவதாக, என தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசை எதிர்கொள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டு வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியினர் பாஜகவுக்கு தாவி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • it is not easy to direct salman khan ரொம்ப கஷ்டம், அவர் இஷ்டத்துக்குதான் நடிப்பாரு- எல்லை மீறிப்போன முருகதாஸ் பட ஹீரோ?