மீண்டும் மீண்டுமா? ரூ.58 ஆயிரத்தை தொட்ட தங்கம் விலை!

Author: Hariharasudhan
19 அக்டோபர் 2024, 10:53 காலை
Quick Share

சென்னையில் இன்று தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.40 உயர்ந்து 7,280 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

சென்னை: உலகின் மத்திய கிழக்கு பகுதிகளில் அதிகரித்த புவிசார் அரசியல் பதற்றம், வல்லரசு நாடுகளில் நிலவும் பொருளாதார நிலை மற்றும் சர்வதேச அளவில் ஒவ்வொரு நாட்டின் மத்திய வங்கிகளின் நாணய கொள்கைகள் ஆகியவை காரணமாக தங்கம் இன்று 58 ஆயிரம் ரூபாயைத் தொட்டுள்ளது. முக்கியமாக, ஐரோப்பிய மத்திய வங்கி சமீபத்தில் அறிவித்த வட்டி குறைப்பு, தங்கம் விலை திடீரென உயர்ந்ததற்கு காரணம் ஆகும்.

மேலும் படிக்க: அரசு அதிகாரியின் காரில் இருந்து ரூ.40 லட்சம் பறிமுதல் : காலி பணியிடங்களை நிரப்ப கையூட்டு? லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை!!

இதன்படி, இன்று (அக்.19) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 40 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 58 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, பவுனுக்கு 320 ரூபாய் உயர்ந்துள்ளது. அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 735 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 61 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், வெள்ளி ஒரு கிராம் 2 ரூபாய் உயர்ந்து 107 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

  • ரூ.411 கோடி அரசு நிலம் அபேஸ்? அறப்போர் இயக்கம் கைகாட்டும் அமைச்சர்!
  • Views: - 130

    0

    0

    மறுமொழி இடவும்