திருப்பதிக்கு இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி : தேவஸ்தானம் எடுத்த முக்கிய முடிவு…. வெளியான அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
9 July 2022, 4:06 pm

திருப்பதி : இலவச தரிசனத்திற்காக வரும் பக்தர்களுக்கு மீண்டும் திருப்பதியில் அதிரடி சலுகைகளை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி திருமலையில் உள்ள அண்ணமய்யா. பவன் கூட்ட அரங்கில் இன்று டயல் ஈ.ஓ என்ற பெயரிலான தொலைபேசி வாயிலாக பக்தர்கள் தேவஸ்தான நிர்வாக அதிகாரியை தொடர்பு கொண்டு தேவஸ்தான நிர்வாகத்திற்கு ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது திருப்பதிக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே விரைவில் திருப்பதியில் இலவச தரிசன டோக்கன்களை விரைவில் மீண்டும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் 123 கோடியே 74 லட்ச ரூபாயை உண்டியலில் பக்தர்கள் காணிக்கை செலுத்தி இருந்தனர். ஜூன் மாதத்தில் 23 லட்சத்து 23 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்ட அங்கபிரதட்சனம் டோக்கன்கள் தவிர மீதி இருக்கும் அங்கபிரதட்சனம் டோக்கன்கள் திருப்பதி மலையில் உள்ள கவுண்டர் மூலம் பக்தர்களுக்கு நேரடியாக வழங்கப்படும் என்று அப்போது கூறினார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி