திருப்பதி பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி : பிப்ரவரி மாதம் இலவச தரிசனம்.. தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan27 January 2022, 10:31 am
ஆந்திரா : திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய பிப்ரவரி மாத தரிசன டிக்கெட் வெளியீடு குறித்து தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
திருப்பதியில் தரிசனம் செய்வதற்கான ரூ.300 சிறப்பு டிக்கெட் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் என்ற வீதத்தில் நாளை காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியாகிறது.
அதேபோல் இலவச தரிசனத்திற்காக நாள்தோறும் ரூ.10,000 டிக்கெட்டுகள் 29-ஆம் தேதி காலை 9 மணி முதல் துவங்குகிறது.
இந்த அறிவிப்பு திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. மேலும் பக்தர்கள் அனைவரும் பிப்ரவரி மாத தரிசனத்திற்கான டிக்கெட்டுகளை https://tirupatibalaji.ap.gov.in/#/login என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தரிசன டிக்கெட் முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் 48 மணி நேரத்திற்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்த ஆர்.டி.பி.சி.ஆர் சான்றிதழ் நெகட்டிவ் என்ற நிலையில் இருக்க வேண்டும் என அறிவித்துள்ளது.
மேலும்,இந்த இரு சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்று இல்லாதவர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படாமல் மலை அடிவாரத்தில் உள்ள அலிபிரி சோதனைசாவடியில் திருப்பி அனுப்பப்படுவர் என தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.