கூகுள் மேப்பை நம்பிச் சென்றதால் விபரீதம்… ஆற்றில் பாய்ந்த கார்… இரு இளம் மருத்துவர்கள் பலி ; 3 பேர் படுகாயம்..!!

Author: Babu Lakshmanan
2 October 2023, 8:25 pm

கேரளாவில் கூகுள் மேப்பை நம்பிச் சென்ற இரு இளம் மருத்துவர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொச்சியில் இருந்து இளம் மருத்துவர்கள் தங்களது நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தனர். அதிகாலை 12.30 மணியளவில் காரில் சென்று கொண்டிருந்த போது கனமழை பெய்து கொண்டிருந்தது.

கூகுள் மேப்பின் மூலம் பாதையை தேர்வு செய்து காரை ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், எதிரே சாலை தெரியாததால் கார் கோதுருத் பகுதியில் உள்ள பெரியாற்றில் கவிழ்ந்தது. இதில், இளம் மருத்துவர்கள் அத்வைத் (29), அஜ்மல் (29) ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் 3பேர் படுகாயம் அடைந்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் அப்பகுதி மக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து உதவினர். இதைத்தொடர்ந்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்