போலீசாரை பார்த்ததும் லஞ்சப் பணத்தை விழுங்கிய அரசு அதிகாரி : ஸ்பாட்டுக்கு வந்த டாக்டர்.. உடனே நடந்த ட்விஸ்ட்!

Author: Udayachandran RadhaKrishnan
25 July 2023, 7:56 pm

மத்தியபிரதேச மாநிலம் கத்னி பகுதியில் வருவாய்த்துறையில் பணியாற்றி வருபவர் கஜேந்திர சிங். இவர் நில விவகாரங்களில் உரிய சான்றிதழ் வழங்குவதற்கு லஞ்சம் பெற்று வந்ததாக புகார்கள் எழுந்தன.

அந்த வகையில் தனியார் நிறுவனம் ஒன்றின் நிலம் தொடர்பான சான்றிதழ் வழங்குவதற்கு கஜேந்திர சிங் லஞ்சம் கேட்டிருக்கிறார். இதுகுறித்து லோக் ஆயுக்தா லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தனியார் நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள் முறையிட்டுள்ளனர்.

லோக் ஆயுக்தா அதிகாரிகளின் ஆலோசனைப்படி, கஜேந்திர சிங்கிடம் பணத்தொகை வழங்கப்பட்டது. அப்போது மறைந்திருந்த லோக் ஆயுக்தா போலீசார் கஜேந்திர சிங்கை கையும் களவுமாக பிடித்தனர்.

அப்போது அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக லஞ்சப் பணத்தை வாயில் போட்டு விழுங்கினார் கஜேந்திர சிங். இதையடுத்து பணத்தை எடுப்பதற்காக போலீஸ் அதிகாரிகள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!