மேலிடத்தில் இருந்து பறந்து வந்த ஆர்டர்… மீண்டும் டெல்லி செல்லும் ஆளுநர் ஆர்என் ரவி : தமிழக அரசியலில் சலசலப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan17 January 2023, 7:46 pm
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 9ஆம் தேதி அரசு தயாரித்துக் கொடுத்த உரையின் சில பகுதிகளை ஆளுநர் படிக்காமல் தவிர்த்ததால், அவரது உரை மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்தார்.
அவர் தீர்மானத்தை படித்துக் கொண்டிருந்தபோதே ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்தது சர்ச்சையானது.
இந்த சம்பவங்கள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய புகார் கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் சட்ட அமைச்சர் ரகுபதி, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் சமர்ப்பித்தனர்.
அதில் ஆளுநர் வரம்பை மீறி செயல்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்த புகார் கடிதத்தை நடவடிக்கைக்காக உள் துறை அமைச்சகத்திற்கு குடியரசுத் தலைவர் அனுப்பிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து கடந்த 13ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரெனெ டெல்லி சென்றார். தமிழ்நாடு இல்லத்தில் தங்கிய அவர், அரசு சார்ந்த எந்த நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவில்லை, யாரையும் சந்திக்கவில்லை.
தன்னுடைய உறவினர் திருமணத்தில் கலந்துகொண்டுவிட்டு உடனே சென்னை திரும்பினார். இந்த நிலையில் அவர் மீண்டும் டெல்லி வருமாறு, உள்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, புதன்கிழமை டெல்லி செல்லும் ஆளுநர், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து, தமிழ்நாடு அரசியல் சூழல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து பேச உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
0
0