தமிழகத்தில் நிலவும் சூழல்… டெல்லி மேலிடத்தில் புகார்? உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கும் ஆளுநர் ஆர்என் ரவி!!

Author: Udayachandran RadhaKrishnan
26 September 2022, 9:59 am

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக இன்று மாலை டெல்லி செல்கிறார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக பிரமுகர்கள் வீடுகளில் வெடிகுண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மாலை சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார். அவர் நாளை, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகளை சந்தித்து இந்த சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது.

ஏற்கெனவே மத்திய உள்துறை அமைச்சகம் இந்த சம்பவம் குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்த சம்பவங்கள் குறித்து கவர்னர் பேசுவார் என்றும் மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் உள்துறை அமைச்சரிடம் ஆலோசனை நடத்துவார் என்றும் எதிர்பார்கப்படுகிறது.

மேலும் ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லியில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து சென்னை திரும்புவார் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • chiyaan vikram new movie title is maaveeran movie dialogue மாவீரன் பட வசனத்தை விக்ரம் படத்திற்கு அப்படியே டைட்டிலாக வைத்த இயக்குனர்?