கேரளா : கொச்சியில் ஜோடியாக வந்து பேரக் குழந்தைகளுடன் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்த நிலையில் பெண் குழந்தையை கொன்று விட்டு தம்பதி நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் அங்கமாலி பரக்கடவு பகுதியை சேர்ந்தவர் பிஜூஸ். திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இவரது மனைவி வெளிநாட்டில் வேலை கிடைத்ததால் சென்றார்.
இதனால் பிஜூஸ் தனது குழந்தைகளை அவரது தாயார் ஸிக்ஸி கவனிப்பில் விட்டு வளர்க்க கூறினார். இந்த நிலையில் சிக்ஸி தனது இரண்டு பேரக் குழந்தைகளையும் அழைத்து கொண்டு அவரது கள்ளக்காதலலான ஜாண் பினோயுடன் கொச்சியில் உள்ள தனியார் விடுதியில் தம்பதியினர் என் பொய்கூறி கடந்த 7 ம் தேதி அறை எடுத்து தங்கி உள்ளனர்.
அறையில் சிக்ஸிக்கும் கள்ளக்காதலனான ஜான் பினோயிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆத்திரம் தாங்கமுடியாத சிக்ஸி இரண்டு பேரக் குழந்தைகளையும் அறையில் விட்டுவிட்டு வெளியேறி உள்ளார்.
அப்போது கோபமடைந்த பினோய் அந்த ஆத்திரத்தை ஒன்றரை வயதுடைய பெண் குழந்தையான னோறா மரியாவை கழிவறையில் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த வாளியில் அமுக்கி மூச்சுதிணற வைத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல் அறையினுள் இருந்துள்ளார்.
அப்போது வெளியே சென்ற சிக்ஸி சமாதானம் அடைந்து அறைக்கு வந்தபோது குழந்தை தண்ணீர் வாளியில் இறந்த நிலையில் இருந்துள்ளது. இதனை கண்ட சிக்ஸி கள்ளகாதலனை காப்பாற்றும் நோக்கில் அறையிலிருந்து குழந்தையை எடுத்துகொண்டு வெளியேறி விடுதி பணியாளர்களிடம் குழந்தைக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஏற்பட்டுள்ளது என நாடகமாடி அங்கிருந்து கள்ளக்காதலனுடன் வெளியேறி அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அப்போது அங்கு மருத்துவர்கள் பரிசோதித்த போது குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனிடையே இவர்கள் இருவரின் நடத்தையில் சந்தேகமடைந்த மருத்துவமனை நிர்வாகம் கொச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே மருத்துவமனைக்கு வந்த போலீசார் நடத்திய விசாரணையில் இவர்கள் இருவரும் தம்பதியினர் இல்லை என்பதும் கள்ளகாதலுனடன் உல்லாசமாக இருக்க வந்ததும் தெரியவந்தது.
இதை தொடர்ந்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர் இதனிடையே குழந்தையின் உடற்கூறு ஆய்வு அறிக்கையில் குழந்தை தண்ணீரில் மூழ்கடிக்கபட்டு கொலை செய்யபட்டிருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் பினோயிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்திய போது குழந்தையை தணணீரில் மூழ்கடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டான். இதை தொடர்ந்து போலீசார் பாட்டியையும், அவருடைய கள்ளக்காதலனையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனிடையே குழந்தையின் அடக்க நிகழ்ச்சிக்கு காரில் சென்ற பிஜூஸ் மனைவியின் உறவினர்களிடம் சிக்கிக்கொண்டார். தாயை அடக்கி வைக்க தெரியாததால் குழந்தையின் உயிர் பறிபோய்விட்டதே என்று ஆத்திரமடைந்த உறவினர்கள் பிஜூஸை சரமாரியாக தாக்கி தர்ம அடி கொடுத்தனர்.
மேலும் அவனது காரை அடித்து நொறுக்கினர். தனக்கும் அந்த சம்பவத்திற்கு சம்பந்தம் கிடையது என கூறிய பிஜூஸ், என் குழந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க விடுங்கன் என கெஞ்சினார். ஆனால் அவனை அடித்து சட்டையை பிடித்து தரதரவென இழுத்து வந்த தர்ம அடி கொடுத்தனர்.
கொலைக்கு பழியான தாயின் தவறான நடவடிக்கையால், பெற்ற குழந்தையின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்காமல் தந்தை ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது.
கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.! நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்,தங்களுடைய நிறுவன பெயரை தவறாக பயன்படுத்தி…
திமுக எம்எல்ஏக்களைப் போல் உதயநிதிக்கு ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை: மதுரை புறநகர்…
திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என பகிரங்கமாக கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.…
விக்ரம் முரட்டு கம்பேக் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல்…
சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய், 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.…
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஏற்பட்ட ஒரு கேள்வியின் காரணமாக கடும்…
This website uses cookies.