பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற கெஜ்ரிவால்.. தடுத்து நிறுத்திய போலீஸ்..!!

Author: Udayachandran RadhaKrishnan
19 May 2024, 2:17 pm

பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற கெஜ்ரிவால்.. தடுத்து நிறுத்திய போலீஸ்..!!

ஆம் ஆத்மி எம்.பி.யான ஸ்வாதி மலிவால் விவகாரத்தில் பிபவ் குமார் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று வீடியோ வெளியிட்டு போராட்டம் அறிவித்தார்.

அதில், பிரதமருக்கு சொல்கிறேன். ஆத் ஆத்மி கட்சியினர் யாரை வேண்டுமானாலும் சிறையில் அடைக்கலாம். மனிஷ் சிசோடியா, சஞ்சய் சிங் என ஒவ்வொருவராக சிறையில் அடைக்கலாம். மே 19-ம் தேதி மதியம் 12 மணிக்கு ஆம் ஆத்மி கட்சி எம்.பி, எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவரும் பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிட போகிறோம். நீங்கள் விரும்பும் அனைவரையும் ஒரே இடத்தில் கைது செய்யலாம் என குறிப்பிட்டிருந்தார்.

மேலும் படிக்க: கையூட்டு கொடுத்து சான்றிதழா? உடனே சட்டத்தை நிறைவேத்துங்க : திமுக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்!

இந்நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காலை ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் வந்தார். அங்கிருந்து கட்சி எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், தொண்டருடன் பா.ஜ.க. அலுவலகம் நோக்கிச் செல்ல தொடங்கினர்.

சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள பாஜக அலுவலகம் நோக்கிச் சென்ற ஆம் ஆத்மி கட்சியினரை டெல்லி போலீசார் தடுத்து நிறுத்தினர். பா.ஜ.க. அலுவலகம் உள்ள பகுதியில் டெல்லி போலீஸ் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • siruthai siva direct new film after kanguva flop தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?