குஜராத்தில் 100 இடங்களுக்கு மேல் பாஜக முன்னிலை… இமாச்சலில் பாஜக – காங்கிரஸ் இடையே கடும் போட்டி ; கொண்டாட்டத்தில் பாஜகவினர்..!!

Author: Babu Lakshmanan
8 December 2022, 9:46 am

குஜராத் மற்றும் இமாச்சல் சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடக்கிறது. 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 64.33 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இங்கு வழக்கமாக பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் இடையே தான் போட்டி இருக்கும். இந்த முறை, டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆளுங்கட்சியாக உள்ள ஆம் ஆத்மியும் களமிறங்கியது. இதனால் மும்முனை போட்டி ஏற்பட்டது.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள், பா.ஜ.க.வுக்கு சாதகமாகவே உள்ளன. இந்த நிலையில், ஓட்டுகளை எண்ணிக்கை இன்று 8 மணிக்கு துவங்கி நடை பெற்று வருகிறது. இந்த ஓட்டு எண்ணிக்கையில் அதிக இடங்களை பாஜக பிடிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டிலும் பா.ஜ.க முன்னிலை பெற்றுள்ளது. குஜராத்தில் 125 தொகுதிகளுக்கும் மேல் பா.ஜ.க முன்னிலை பெற்றுள்ளது.

அதேபோல, 68 தொகுதிகளைக் கொண்ட இமாச்சல பிரதேச சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் மீண்டும் பாஜக வெற்றி பெறும் என்று ஒருசில தனியார் சேனல்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. அதேவேளையில், பாஜகவுக்கு காங்கிரஸ் சவால் விடுக்கும் விதமாக, சரிசமமான இடங்களைக் கைப்பற்றும் என்பதால், அங்கு இழுபறி ஏறபட வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டது.

அதன்படியே, இமாச்சல் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் பா.ஜ.க.வும் காங்கிரசும் மிக சொற்ப வித்தியாசத்தில் முன்னிலையில் சென்று கொண்டிருக்கிறது. பாஜக 33 தொகுதிகளிலும், காங்கிரஸ் 32 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.

குஜராத்தில் வெற்றி உறுதியான நிலையில், இமாச்சல் பிரதேசத்திலும் வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் பாஜகவினர் தேர்தல் முடிவுகளை கொண்டாடி வருகின்றனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ