பேருந்து – கார் நேருக்கு நேர் மோதி கோர விபத்து ; அப்பளம் போல நொறுங்கிய கார்… 9 பேர் உடல் நசுங்கி பலியான அதிர்ச்சி சம்பவம்!!

Author: Babu Lakshmanan
31 December 2022, 10:34 am

குஜராத் ; குஜராத் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து, காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தின் நவ்சாரி பகுதியில் இருக்கும் அகமதாபாத் – மும்பை நெடுஞ்சாலையில் சொகுசு பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் முற்றிலும் சிதைந்து போனது. பேருந்தின் முன்பக்கமும் பலத்த சேதமடைந்தது.

இந்த விபத்தில் வாகன இடிபாடுகளுக்கு நடுவே சிக்கியதில் 9 பேர் உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுபற்றி நவ்சாரி மாவட்ட துணை போலீஸ் சூப்பிரெண்டு வி.என். பட்டேல் கூறும்போது, இந்த விபத்திற்கான காரணம் பற்றி உடனடியாக எதுவும் தெரிய வரவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.

  • Director Mysskin controversial speech நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா?…மிஸ்கினை காரி துப்பிய பிரபல நடிகர்…!