ஆய்வாளர் எச்சரித்தபடியே துருக்கியை தொடர்ந்து இந்தியாவில் நிலநடுக்கம்… எங்கு தெரியுமா..? இனி என்னவெல்லாம் நடக்கப்போகுதோ…?
Author: Babu Lakshmanan11 February 2023, 5:05 pm
டச்சு ஆய்வாளர் எச்சரித்ததைப் போல துருக்கியை தொடர்ந்து இந்தியாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கி மற்றும் சிரியா எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் இருநாடுகளும் மிகவும் உருக்குலைந்து போயுள்ளன. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டிவிட்டது. அதிர்ஷ்டவசமாக சிலர் உயிருடனும் மீட்கப்பட்டு வருவது அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களை சற்று ஆறுதல் படித்தியுள்ளது.
துருக்கி நிலநடுக்கத்தை முன்கூட்டிய கணித்த டச்சு ஆய்வாளர் பிரான்க், ஆப்கானிஸ்தானை தொடர்ந்து, பாகிஸ்தான் வழியாக இந்தியாவிலும் ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அவர் எச்சரித்தபடி ஆப்கானிஸ்தானில் அண்மையில் நிலஅதிர்வு ஏற்பட்டது. இந்த நிலையில், இன்று அதிகாலை குஜராத் மாநிலத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. சூரத் நகரில் இருந்து 27 கிலோ மீட்டர் தொலைவில் 5.2 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
மேலும், ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவான இந்த நில அதிர்வால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கட்டிடங்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது