சர்ச்சைக்குள்ளான ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபாடு நடத்தலாம் ; பரபரப்பான தீர்ப்பை வழங்கிய வாரணாசி நீதிமன்றம்…!!
Author: Babu Lakshmanan31 January 2024, 6:04 pm
ஞானவாபி மசூதியின் ஒருபகுதியில் இந்துக்கள் சுவாமி தரிசனம் செய்ய வாரணாசி நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஞானவாபி மசூதியில் இந்துக்களின் கடவுள் இருப்பதாகவும், ஆகவே தங்களை வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறி இந்து மதத்தைச் சேர்ந்த சில பெண்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக ஆய்வு செய்ய உத்தரவிட்டது. ஆனால், நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து மசூதி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், மசூதியில் ஆய்வு செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
அதன்பேரில், பலத்த பாதுகாப்போடு தொல்லியல் துறையினர் நடத்திய ஆய்வில், அங்கு இந்து கடவுள் இருப்ப உறுதியானது.
இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, ஞானவாபி மசூதியின் தெற்கு பகுதி அடிபாகத்தில் உள்ள இடத்தில் இந்து பிரிவினர் வழிபாடு நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பளித்தது.
மேலும், காசி விசுவநாதர் கோவில் அறக்கட்டளை வழிபாடு நடத்துவதற்கான பூசாரியை நியமிக்க வேண்டும் என்றும், அடுத்த ஒருவாரத்திற்குள் பூஜைகள் செய்வதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.