ஆந்திரா, பீகார் தவிர மற்ற மாநிலங்களுக்கு அல்வா : பட்ஜெட் குறித்து பிரகாஷ்ராஜ் கிண்டல்!!
Author: Udayachandran RadhaKrishnan23 July 2024, 4:59 pm
2024- 25-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.
அப்போது, மத்திய பட்ஜெட்டில் ஆந்திர மாநில வளர்ச்சிக்கு ரூ.15,000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் பீகாரில் புதிய சாலைகள் அமைப்பது உள்ளிட்ட திட்டங்களுக்கு ரூ.26,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
இவரது இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பாஜகவுக்கு ஆதரவளித்துள்ள ஆந்திரா, பீகாருக்கு மட்டும் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
இதனால் நாடாளுமன்றத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.இந்நிலையில் பட்ஜெட் தொடர்பாக நடிகர் பிரகாஷ்ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
அதில், “ஆந்திரா – பீகார் பட்ஜெட் வெளியாகிவிட்டது. மற்ற மாநிலங்கள் மகிழ்ச்சியாக அல்வா சாப்பிடுங்கள்” என்று பட்ஜெட்டை அவர் விமர்சித்துள்ளார்.