கட்டிலில் கட்டி வைத்து மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம்.. கணவரிடம் சொல்லி கதறி அழுது கண்ணீர்… இறுதியில் நடந்த சோகம்!
Author: Babu Lakshmanan14 January 2023, 3:45 pm
உத்தரபிரதேசத்தில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை வீட்டுக்குள் புகுந்து நபர் ஒருவர் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது மாற்றுத்திறனாளி பெண், தனது கணவனுடன் வாழ்ந்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக உடல்நிலை குறைபாடு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 8ம் தேதி அவரது கணவர் செங்கல் சூளைக்கு வழக்கம் போல பணிக்கு சென்று விட்டார்.
வீட்டில் மாற்றுத்திறனாளி பெண் மட்டும் தனியாக இருந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த முகமது முன்தியாஸ் (30) என்பவர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, மாற்றுத்திறனாளி பெண்ணை கட்டிலில் கட்டி போட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், அந்த பெண்ணை கொடூரமாக தாக்கியும் உள்ளார்.
இதனால் அந்த பெண் அலறித்துடித்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அதற்குள், முகமது முன்தியாஸ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து, அந்தப் பெண்ணை மீட்ட அவர்கள், சிகிச்சைக்காக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மனைவிக்கு நேர்ந்த கொடுமையை கேட்டு அவரது கணவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளா. அங்கு கணவரை பார்த்த அந்த மாற்றுத்திறனாளி பெண், கண்ணீர் மல்க தனக்கு நேர்ந்த அவலத்தை சொல்லி கதறியுள்ளார். அவர் இதுகுறித்து போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் முகமது முன்தியாஸ் மீது பலாத்காரம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாற்றுத்திறனாளி பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பிரேத பரிசோதனையில், அந்த பெண்ணின் அந்தரங்க உறுப்புகளில் காயங்கள் ஏற்பட்டு, அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.