வாகன ஓட்டிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிரடி குறைப்பு : மத்திய அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
21 May 2022, 6:58 pm

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.

இதற்கிடையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு சற்று குறைத்தது. இந்த விலைக்குறைப்பு அமலுக்கு வந்தது முதல் பெட்ரோல், டீசல் விலையில் பெரிய மாற்றமில்லை. இதனால், சென்னையில் கடந்த 137 நாட்களாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40 ஆகவும், டீசல் ரூ.91.43 ஆகவும் விற்கப்பட்டது.

ஆனால், கடந்த மார்ச் 22ம் தேதி முதல் மெல்ல மெல்ல மீண்டும் விலை உயர்ந்து காணப்பட்டு ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய் மற்றும் ஒரு லிட்டர் டீசல் 100.94 ரூபாய்க்கும் விற்பனையாகின.

இதையடுத்து கடந்த 45 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் இருந்த நிலையில் தற்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பெட்ரோல் டீசலுக்கான கலால் வரியை குறைத்து உத்தரவிட்டுள்ளார்.

பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி ரூ.6 குறைக்கப்பட்டுள்ளதால், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.50 குறைப்பு, டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

111 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 10 ரூபாய் வீதம் குறைய உள்ளதால் வாகன ஓட்டிகள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!