திருப்பதி பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ் : இலவச தரிசன டிக்கெட் குறித்து தேவஸ்தானத்தின் சூப்பர் அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
14 February 2022, 1:15 pm

ஆந்திரா : ஏழுமலையானை தரிசிக்க திருப்பதியில் உள்ள கவுண்டர்களில் நாளை முதல் இலவச தரிசன டிக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஏழுமலையான் வழிபடுவதற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் மற்றும் இலவச தரிசன டிக்கெட்டுகள் ஆகியவை ஆன்லைன் மூலம் மட்டுமே வெளியிடப்பட்டு வந்தன.

ஒவ்வொரு மாதமும் ஏழுமலையானை வழிபடுவதற்காக ஆன்-லைனில் வெளியிடப்படும் லட்சக்கணக்கான டிக்கெட்டுகளை பக்தர்கள் பத்தே நிமிடத்தில் முன்பதிவு செய்தனர்.

இதனால் இணையதள சேவை குறைவான வேகத்தில் இருக்கும் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பக்தர்கள், இணையதள சேவையை பயன்படுத்தி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய இயலாத நிலையில் இருக்கும் பக்தர்கள் ஆகியோர் உள்ளிட்டோர் ஏழுமலையானை வழிபட இயலாத நிலை ஏற்பட்டு வந்தது.

எனவே கடந்த சில மாதங்களாக நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரையிலான பகுதியை மட்டுமே திருப்பதிக்கு வந்து ஏழுமலையானை வழிபட்டு வருகின்றனர்.

ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பக்தர்கள் தங்கள் ஊர்களில் இருந்து புறப்பட்டு திருப்பதியை அடைந்து அங்கிருந்து திருமலைக்கு செல்கின்றனர்.

சாமி கும்பிட்ட பின் திருப்பதி மலையில் இருந்து நேரடியாக தங்கள் ஊர்களுக்கு சென்று விடுகின்றனர். இதனால் கீழ் திருப்பதி என்றும் அழைக்கப்படும் திருப்பதியில் ஹோட்டல், டாக்ஸி ஆகியவை உள்ளிட்ட பல்வேறு தொழில்களை நடத்துபவர்கள், அவற்றில் வேலை செய்பவர்கள் ஆகியோர் பொருளாதார ரீதியாக கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நாளை மறுநாள் 16ஆம் தேதி ஏழுமலையானை வழிபடும் வகையில் நாளை 15 ஆம் தேதி காலை 9 மணி மணி முதல் நாள் ஒன்றுக்கு பத்தாயிரம் என்ற எண்ணிக்கையில் திருப்பதியில் உள்ள ஸ்ரீனிவாசம் விருந்தினர் மாளிகை வளாகம், கோவிந்தராஜ சுவாமி சத்திரம், அலிபிரி அருகே உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய 3 இடங்களில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் தங்கள் ஆதார் அட்டைகளை சமர்ப்பித்து டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். டிக்கெட்டுகளை வாங்கும் பக்தர்கள் அவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கும் நேரத்தில் ஏழுமலையானை தரிசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

ஆனால் பக்தர்கள் கண்டிப்பாக 2 டேஸ் கரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் அல்லது 48 மணி நேரத்திற்கு முன் நடத்தப்பட்ட பரிசோதனையில் கிடைக்கப்பெற்ற கரோனா நெகட்டிவ் சான்றிதழை உடன் கொண்டு வரவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இலவச தரிசன டிக்கெட்டுகள் பெற்றுக்கொண்ட பக்தர்கள் 2 டேஸ் தடுப்பூசி சான்றிதழை கட்டாயம் எடுத்து வரவேண்டும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?