காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்களில் ஒருவராக பார்க்கப்படும் ஹர்திக் படேல், அக்கட்சியில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத் சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டின் இறுதியில் தேர்தல் நடைபெற இருக்கிறது. அங்கு பாஜகவே தொடர்ந்து ஆட்சி செய்து வருகிறது. ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் தோல்வியை சந்தித்து வரும் காங்கிரஸ், குஜராத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று முனைப்பு காட்டி வருகிறது.
குஜராத்தை பொறுத்தவரையில் படேல் சமூகத்தினரே அதிகளவில் வசித்து வருகின்றனர். இவர்களின் ஓட்டுக்களை பெறும் கட்சியே ஆட்சியமைக்கும் என்றே கருதப்படுகிறது. இந்த சமூகத்தைச் சேர்ந்த ஹர்திக் படேல் என்பவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக, படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தி, படேல் சமூகத்தினரை மட்டுமல்லாமல் அரசியல் கட்சிகளின் கவனத்தையும் ஈர்த்தார்.
இதையடுத்து, படேல் சமூகத்தினரின் ஆதரவைப் பெறும் விதமாக, கடந்த 2019ம் ஆண்டு ஹர்திக் படேலை காங்கிரஸ் தனது கட்சியில் சேர்த்துக் கொண்டது. அதோடு, அவருக்கு குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து ஹர்திக் படேல் விலக முடிவு செய்திருப்பது, அவரது செயலின் மூலம் தெரிய வந்துள்ளது. தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து குஜராத் காங்கிரஸ் செயல் தலைவர் என்ற தன் சுய விபரத்தை ஹர்திக் படேல் நேற்று நீக்கியுள்ளார். இது காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறுவதற்கு அவர் முடிவு செய்துவிட்டதை காட்டுவதாக அமைந்துள்ளது. மேலும், அவர் ஆம்ஆத்மி கட்சியில் சேர இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஹர்திக் படேலின் இந்த செயல் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் மின்சாரம் தாக்கிய உயிருக்கு போராடிய சிறுவனை ரியல் ஹீரோவான இளைஞர் காப்பாற்றிய சம்பவம் பாராட்டுக்களை குவித்து வருகிறது. சென்னை…
களைகட்டிய பாடல் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, அபிராமி உள்ளிட்ட பலரது நடிப்பில்…
வேடசந்தூர் அருகே உள்ள புளியமரத்து கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன்(வயது 75). இவர் பணி ஓய்வு பெற்ற கிராம நிர்வாக…
வடிவேலுவின் கம் பேக் கோலிவுட்டில் டாப் காமெடி நடிகராக வலம் வரும் வடிவேலு, கடந்த 2011 ஆம் ஆண்டு தேர்தலில்…
சினிமா பிரபலங்கள் திருமணம் செய்யாமல் கர்ப்பமான நிகழ்வுகள் அன்றைய காலம் தொட்டே வாடிக்கையாக இருந்தன. நடிகை ஸ்ரீதேவியை குறிப்பிட்டு சொல்லலாம்.…
This website uses cookies.