தனியறையில் பெண் பயிற்சியாளரிடம் சில்மிஷம்.. அமைச்சரின் வெறிச்செயல்.. பாலியல் புகாரால் பறிபோன பதவி!!
Author: Udayachandran RadhaKrishnan2 ஜனவரி 2023, 12:50 மணி
அரியானா மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் சந்தீப் சிங். இவர் இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டனும் ஆவார். இவர் மீது முன்னாள் தேசிய அளவிலான வீராங்கனையும், ஜூனியர் தடகள பெண் பயிற்சியாளரான ஒருவர் பாலியல் புகார் கூறி உள்ளார்.
அந்த புகாரில், விளையாட்டுத்துறை அமைச்சர் சந்தீப் சிங் எனக்கு இன்ஸ்டாகிராமில் செய்தி அனுப்பினார், எனது தேசிய விளையாட்டு சான்றிதழ் நிலுவையில் இருப்பதாகவும், இது தொடர்பாக சந்திக்க விரும்புவதாகவும் கூறினார்.
என்னிடம் இருந்த சில ஆவணங்களுடன் சந்தீப் சிங்கை அவரது முகாம் அலுவலகத்தில் சந்திக்க சென்றேன் அங்கு சென்றபோது,மந்திரி என்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
அவர் என்னை அவரது அவரது வீட்டில் இருந்த ஒரு அறைக்கு அழைத்துச் சென்றார். என் ஆவணங்களை மேசையில் வைத்து விட்டு என் காலில் கை வைத்தார், அவர் உன்னை முதல் முறையாகப் பார்த்தபோது, எனக்கு பிடித்து விட்டது என கூறினார். மேலும் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், நான் உன்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பேன், என்று கூறினார்.
அவர் என்னை அவரது அவரது வீட்டில் இருந்த ஒரு அறைக்கு அழைத்துச் சென்றார். என் ஆவணங்களை மேசையில் வைத்து விட்டு என் காலில் கை வைத்தார், அவர் உன்னை முதல் முறையாகப் பார்த்தபோது, எனக்கு பிடித்து விட்டது என கூறினார். மேலும் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், நான் உன்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பேன், என்று கூறினார்.
இந்த நிலையயில் அரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜய் அம்பாலாவில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து விட்டு பெண் பயிற்சியாளர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும் போது, ஒலிம்பிக் அளவிலான தடகள வீரர் ஒருவர் எப்படி தவறாக நடந்து கொண்டார் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
நானும் ஒரு வீராங்கனைதான், பிப்ரவரியில் இருந்து இது வரை இந்த நபரின் இத்தகைய மோசமான நடத்தையை நான் எவ்வளவு பொறுமையாக பொறுத்துக்கொண்டேன் என்பதை சிந்தித்து பாருங்கள்.விளையாட்டுத் துறையில் எதிர்மறையான தாக்கம் ஏற்படும் என்று பயந்ததால், இந்த சம்பவத்தைப் பற்றி இதற்கு முன் வாய் திறக்கவில்லை.
அவர் ராஜினாமா செய்து சிறையில் அடைக்கப்பட்டவுடன்,பாதிக்கப்பட்டவர்கள் மனம் திறந்து பேச கண்டிப்பாக முன்வருவார்கள். ஒலிம்பிக் அளவிலான தடகள வீரர் மற்ற தேசிய அளவிலான விளையாட்டு வீரர்களிடம் எப்படி தவறாக நடந்து கொள்கிறார் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என கூறினார்.
அமைச்சர் மந்திரி சந்தீப் சிங் விளையாட்டு துறையை ராஜினாமா செய்த நிலையில் முதலமைச்சர் மந்திரி மனோகர் லால் கட்டாரிடம் தனது விளையாட்டு இலாகாவை ஒப்படைத்ததாக கூறினார். எனினும் அவர் அமைச்சரவையில் இருந்து விலகவில்லை.
இது குறித்து அமைச்சர் சந்தீப் சிங் கூறும்போது, என் மீது குற்றம்சுமத்தப்பட்டது அடிப்படையற்றவை, பொய் குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என நம்புவதாக கூறிய அவர், விசாரணை அறிக்கை வரும் வரை விளையாட்டு துறையின் பொறுப்பை முதலமைச்சரிடம் ஒப்படைப்பதாக கூறியுள்ளார்.
0
0