இந்தியாவில் கொரோனா தொற்று சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் அதுதொடர்பாக ஐசிஎம்ஆர் விளக்கம் அளித்துள்ளது.
2020ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து கொரோனா தொற்று இந்தியாவில் தனது கோர தாண்டவத்தை நிகழ்த்திக் காட்டியது. எனினும், கடந்த சில மாதங்களாக குறைந்த அளவே கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது. உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்தது.
எனினும், கடந்த சில வாரங்களாக தொற்று சற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஐசிஎம்ஆர் கூடுதல் இயக்குனர் சமீரன் பாண்டா கூறுகையில் சில மாவட்டங்களில் மட்டுமே கொரோனா தொற்று சற்று அதிகரித்துள்ளது. நாம் பார்ப்பது தற்காலிகமே தவிர, புதிய வகையான கொரோனா தொற்றின் தொடக்கம் அல்ல.
இவை நாடு முழுவதும் சீரான அளவில் பரவாது. எனினும், 4வது அலை தொடக்கத்திற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று கூறினார்.
கொரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் சில மாநிலங்களில் அதிகரிக்கும் நிலையில், குறைந்த சோதனையே இந்த அதிகரிப்புக்கு காரணம் என்ற சமீரன் அதற்கு உதாரணமாக டெல்லியை காட்டினார்.
டெல்லியில் சோதனையை அதிகரித்த உடன், பாதிப்பு சதவிகிதம் 7லிருந்து 5 ஆக குறைந்துள்ளது என்று சுட்டிக்காட்டினார்.
சுந்தர் சி கதையை உடனே ஓகே செய்த நடிகர் கார்த்தி சுந்தர் சி தமிழ் திரைப்பட உலகில் முன்னணி இயக்குனராக…
நண்பர் ஸ்ரீனிவாசா ராவின் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டு! பிரபல இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி மீது அவரது நீண்டகால நண்பர் எனக்கூறும் திரைப்படத்…
தஞ்சையில், நெருங்கிப் பழகி தனிமையில் இருந்ததால் உருவான கருவைக் கலைக்கச் சொல்லி கொலை மிரட்டல் விடுத்த ஜிம் உரிமையாளர் கைது…
அடித்து சொல்லும் சந்தீப் கிஷன் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படம் 2025 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும்…
அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் நாளில், கையெழுத்து இயக்கத்தை நடத்த உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பூர்:…
நடிகர் மாதவனின் புதிய செயலி நடிகர் மாதவன் பங்குதாரராக இருக்கும் ‘Parent Army (Parent Geenee)’ செயலி சென்னையில் உள்ள…
This website uses cookies.