இண்டியா கூட்டணியின் பிரதமர் இவர் தான்.. ஒரே ஒரு தலித் பிரதமர் : காங்., எம்பி சசி தரூர் பேச்சால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
17 October 2023, 10:01 pm

இண்டியா கூட்டணியின் பிரதமர் இவர் தான்.. ஒரே ஒரு தலித் பிரதமர் : காங்., எம்பி சசி தரூர் எம்பி பேச்சால் பரபரப்பு!!

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? தலைமை தாங்கும் கட்சி எது என்று எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் 2024 மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றிபெற்று மத்தியில் ஆட்சியைப் பிடித்தால், மல்லிகார்ஜுன கார்கே அல்லது ராகுல் காந்தி காங்கிரஸ் தரப்பில் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.

‘இந்தியா’ என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் அமைத்து உள்ள கூட்டணியில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பிரதமர் வேட்பாளர் பற்றி முடிவு எடுக்கப்படும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்து உள்ளார்கள். இந்த நிலையில்தான் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சசி தரூர் தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 374

    0

    0