வெளுத்து வாங்கிய கனமழை.. பள்ளியில் தவித்த மாணவர்கள் : அரைநாள் விடுப்பு வழங்கிய மாவட்ட நிர்வாகம்!!
Author: Udayachandran RadhaKrishnan9 December 2022, 4:43 pm
புயல், மழை காரணமாக இன்று மதியம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
மாண்டஸ் புயல், மழை காரணமாக இன்று மதியம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றிற்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உத்தரவை மீறும் பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில் வங்க கடலில் ஏற்பட்டுள்ள புயல் சீற்றம் காரணமாக திருப்பதி, திருமலை உட்பட திருப்பதி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை முதல் தொடர்ந்து லேசான மழை பெய்து வருகிறது.