கடும் பனி மூட்டம்… விமான சேவைகள் முற்றிலும் பாதிப்பு : 100க்கும் மேற்பட்ட விமான சேவை ரத்து!!

Author: Udayachandran RadhaKrishnan
16 January 2024, 10:10 am

கடும் பனி மூட்டம்… விமான சேவைகள் முற்றிலும் பாதிப்பு : 100க்கும் மேற்பட்ட விமான சேவை ரத்து!!

நாட்டின் வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. பனிமூட்டம் அதிக அளவில் காணப்படுவதால் எங்கு பார்த்தாலும் புகைமூட்டம்போல் காட்சியளிக்கிறது.

குறிப்பாக டெல்லி, பஞ்சாப்,உத்தரபிரதேசம்,அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகாலை நேரத்தில் கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது.

இந்த நிலையில், தலைநகர் டெல்லியில் நிலவி வரும் கடும் பனி மூட்டம் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பல விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி
  • Close menu