குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம்…அமலுக்கு வருகிறது புதிய விதி: மத்திய அரசு அறிவிப்பு..!!
Author: Rajesh16 February 2022, 4:42 pm
புதுடெல்லி: இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் 4 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளும் ஹெல்மெட் அணிய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
4 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் 40 கி.மீ வேகத்துக்கு மேல் செல்லக்கூடாது எனவும் இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்ட விதி 2023 பிப்ரவரி 15ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது.